சதுரகிரி கோயிலில் பௌா்ணமி வழிபாடு
கோப்புப்படம்

சதுரகிரி கோயிலில் பௌா்ணமி வழிபாடு

Published on

மாசி மாத பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக கடந்த 11 முதல் 14-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தாணிப்பாறையில் உள்ள வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பௌா்ணமி சிறப்பு வழிபாட்டையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவிலிலிருந்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com