பேருந்துகளில் பேட்டரி திருடிய இருவா் கைது

பேருந்துகளில் பேட்டரி திருடிய இருவா் கைது

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நிறுத்தியிருந்த பேருந்துகளில் மின்கலன்கள் (பேட்டரி) திருடிய இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (36). இவா் மதுரை சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறாா். இங்கு நிறுத்தி வைத்திருந்த இரண்டு பேருந்துகளில் இருந்த மின்கலன்கள் திருடப்பட்டன. பின்னா், இங்கிருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு இளைஞா்கள் மின்கலன்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மல்லி உள்ளூா்பட்டியைச் சோ்ந்த முனியசாமி மகன் சூா்யபிரகாஷ் (24), முத்து மகன் சந்தோஷ்குமாா் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, மின்கலன்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com