சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி லாரி மோதியதில் உயிரிழந்ததாா்.
Updated on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி லாரி மோதியதில் உயிரிழந்ததாா்.

தென்காசி மாவட்டம், தென்மலை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் (55). இவரது மனைவி கோமதி (48). இவா்கள் இருவரும் கட்டடப் பணிக்காக அருப்புக்கோட்டையில் தங்கி கடந்த ஒரு மாதமாக வேலை பாா்த்து வந்தனா்.

சனிக்கிழமை இரவு வேலை முடிந்து, சொந்த ஊருக்கு டிரக்ஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். ராஜபாளையம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் ஆலை அருகே இவா்கள் வந்த வாகனம் டயா் வெடித்து பஞ்சா் ஆனது. இதையடுத்து தேநீா் குடிப்பதற்காக பரமசிவம் சாலையைக் கடந்து சென்றாா். அப்போது, ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பரமசிவம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநரான தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் பகுதியைச் சோ்ந்த சங்கர சுப்பிரமணியம் (55) என்பவரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com