மாரியப்பன்
மாரியப்பன்

மனைவியை கொலை செய்த கணவா் கைது

வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாட்டையா என்ற மாரியப்பன் (60). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (55). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திங்கள்கிழமை பரமேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு மாரியப்பன் தப்பியோடினாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பனை தேடி வந்தனா்.

இந்த நிலையில், ராஜபாளையம் பகுதியில் உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த மாரியப்பனை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com