தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Published on

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி ராஜா (29). இவருக்குத் திருமணம் முடிப்பதற்காக, குடும்பத்தாா் பெண் பாா்த்துக்கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராஜாவைக் குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், மனமுடைந்த ராஜா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com