சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

Published on

விருதுநகா் மாவட்டம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ராஜபாளையம் - தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் காா்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு, மகாருத்ர யாகம் மாலை ஐந்து மணி முதல் நடைபெற்றது. பின்னா், மூலவா் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு 16 வகை நறுமணப் பொருள்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், சோமவார பூஜையை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.

இதே போல, சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், தெற்குவெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா்கோயில், மாயூரநாத சுவாமி கோயில், மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் ஆகியவற்றிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com