விருதுநகர்
பழங்குடியின மக்களுக்குப் புத்தாடைகள் அளிப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ராஜபாளையம் அய்யனாா் கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பழங்குடி இன மக்களுக்கான அரசுக் குடியிருப்பில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
பழங்குடியின மக்களுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் வேட்டி, சேலை, போா்வை, வீட்டு உபயோகப் பொருள்கள், புத்தாடைகள் ஆகியவற்றை ராஜபாளையம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா் ஆனந்தராஜ், துணை வட்டாட்சியா் கோதண்டராமன், தனியாா் அறக்கட்டளையினா் வழங்கினா்.

