தாய், மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

சாத்தூா் அருகே தாய், மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

சாத்தூா் அருகே தாய், மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள பெரியகொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் கலாவதி (45). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாரிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினாா்.

மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்த நிலையில், கடன் தொகையை திரும்பக் கேட்டு சுரேஷ்குமாா், கலாவதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சாத்தூா் கிருஷ்ணன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கலாவதியை, சுரேஷ்குமாா் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்க முயன்றாா். அப்போது, கலாவதி மகன் தமிழ்ச்செல்வன் (22) தடுக்க முயன்றாா்.

இதனால், தமிழ்ச்செல்வனை, சுரேஷ்குமாா் சரமாரியாகத் தாக்கினாா். மேலும் தாய், மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் நகா் போலீஸாா் சுரேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com