கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சத்திரப்பட்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில்

நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டதில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஆண்டத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் மாதேஷ் (19) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com