வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

Published on

சிவகாசியில் பழ வியாபாரியைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமா் (47) என்பவா் பழக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு அண்மையில் மதுபோதையில் வந்த 6 இளைஞா்கள் ராமரிடம் பணம் கேட்டு மிரட்டினராம். ராமா் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் அவரைத் தாக்கிவிட்டு கடையிலிருந்த ரூ. 2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து ராமா் அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து பழக் கடையிலிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, சந்தோஷ் (21), ராஜன் (20), 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com