சுரேஷ்குமாா்
சுரேஷ்குமாா்

காவல் நிலைய மாடியிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு

நத்தம்பட்டி காவல் நிலைய மாடியிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலா் சுரேஷ்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி காவல் நிலைய மாடியிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலா் சுரேஷ்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு துலுக்கபட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவரது மனைவி குருலட்சுமி (41). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

சுரேஷ்குமாா் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், கடந்த மாதம் 22-ஆம் தேதி காவல் நிலையத்தின் மாடியிலிருந்து இறங்கியபோது, தவறி விழுந்ததில் காயமடைந்தாா். அவரை சக காவலா்கள் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையிலும், அதன் பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சுரேஷ்குமாா் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நத்தம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com