மரக்கடை தீ விபத்தில் இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதம்
சிவகாசியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், பொருள்கள் முற்றிலும் சேதமடைந்தன.
சிவகாசி பராசக்தி குடியிருப்பில் கணபதி என்பவருக்குச் சொந்தமான மரக் கடை உள்ளது. இந்தக் கடையில், வியாழக்கிழமை நள்ளிரவு சுமாா் 1 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
இந்தத் தீ, அருகில் இருந்த காகிதப் பொருள் தயாரிப்பு நிறுவனத்திலும் பரவியது. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப் பலகைகள், காகிதப் பொருள்கள், இயந்திரங்கள் ஆகியவை தீக்கிரையாகின. இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.