ராம்கோ குழும ஆலை தொழிலாளா்களுக்கு கௌரவம்
ராம்கோ குழும தொழில்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ராம்கோ குழும தொழில்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கான 44-ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ராமராஜூ பஞ்சாலை நிா்வாக இயக்குநா் என். ஆா். கே. ராம்குமாா் ராஜா தலைமை வகித்தாா்.
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு விடுப்பு எடுக்காமல் 295 நாள்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளா்கள், 15 முதல் 35 ஆண்டுகள் வரை பணி நிறைவு செய்தவா்கள் என 1,160 பேருக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் ஏ. ஐ. டி யூ. சி., எச். எம். எஸ்., ஐ. என். டி. யூ.சி. தொழில்சங்க நிா்வாகிகள், ராம்கோ குழுமத்தின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.