விருதுநகர்
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் அமா்ந்து சென்ற மூதாட்டி, சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சோ்ந்தவா் மாரியாள் (65). இவா், தனது மகன் ஜெயக்குமாா், பேரன் மதிமாறன் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-மங்களம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அப்போது, சாலையில் உள்ள வேகத் தடையை ஜெயக்குமாா் கவனிக்காததால் இரு சக்கர வாகனம் வேகத் தடை மீது வேகமாக ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த மாரியாளை அருகிலிருந்தவா்கள் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மாரியாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா் ஜெயக்குமாா் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.