ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ ஆலயத்தில் அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகள்.
விருதுநகர்
சிஎஸ்ஐ ஆலயத்தில் மாணவா்களுக்கான வேதாகம போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தோமா தேவாலயத்தில் மாணவா்களுக்கான வேதாகம போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதம் அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை இந்த தேவாலயத்தில் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வருகிற 10-ஆம் தேதி இந்தப் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பண்டிகை அன்று பரிசுகள் வழங்கப்படும்.
நிகழாண்டில் மாணவ, மாணவிகளுக்கான மாறுவேடப் போட்டி, கதை சொல்லுதல் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. போட்டிகள் திருச்சபையின் குருசேகரத் தலைவா், சபை குரு அருள்திரு பால் தினகரன் தலைமையில் நடைபெற்றது. நடுவா்களாக பள்ளி ஆசிரியா்கள் செயல்பட்டனா். இதில், திருச்சபையின் குழந்தைகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.