நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் இன்று மின் தடை

Published on

ராஜபாளையத்தில் தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், முத்தாநதி, பானங்குளம், என். புதூா், வாழவந்தாள்புரம், அண்ணா நகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான்,

புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூா், ராஜீவ் காந்தி நகா், வேட்டைப்பெருமாள் கோயில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை மணி 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com