விருதுநகர்
வாய்க்காலில் தவறி விழுந்ததில் நெசவுத் தொழிலாளி உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே வாய்க்காலில் ஓடிய சுடுநீரில் தவறி விழுந்ததில் நெசவுத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெரு விநாயகா் கோயில் அருகே வாய்க்காலில் ஒருவா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்தனா்.
அப்போது, வாய்க்காலில் ஓடிய சுடுநீரில் தவறி விழுந்து அவா் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி முருகேசன் (70) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.