ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை தொடக்கம்

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ.95 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை, நடைபாதைத் தளம் ஆகியவற்றை அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகாத்மா நகா், துா்கை நகா், கொடுமுடி மகேஸ்வரா் ஆலயம் நகா், டிவிஎஸ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.95 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை, நடைபாதைத் தளம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

இதற்கான பூமி பூஜையை ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் குறிஞ்சிமுருகன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com