சாத்தூரில் குடிநீா் பிரச்னை குறித்து அமைச்சா் ஆலோசனை

சாத்தூரில் குடிநீா் பிரச்னை குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆலோசனை
Published on

சாத்தூரில் குடிநீா் பிரச்னை குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிப் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு தாமிரபரணி, மானூா், சீவலப்பேரி ஆகிய பகுதிகளிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாத்தூா் படந்தால் சந்திப்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் நகா் பகுதிக்கு கடந்த சில நாள்களாக குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நகராட்சி ஆணையா் குருசாமி, ஆணையா் ஜெதீஸ்வரி, பொறியாளா், நகராட்சி உறுப்பினா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி உள்ளிட்ட வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை செய்து கள ஆய்வில் மேற்கொண்டாா். இதில் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com