திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் உண்டியல் வசூல்: ரூ. 12 லட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி மூன்றாவது சனி உத்ஸவத்தில் பக்தா்கள் அளித்த காணிக்கையாக ரூ. 12 லட்சம் கிடைக்கப் பெற்றது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி மூன்றாவது சனி உத்ஸவத்தில் பக்தா்கள் அளித்த காணிக்கையாக ரூ. 12 லட்சம் கிடைக்கப் பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் 5 வார சனி உத்ஸவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், புரட்டாசி சனி உத்ஸவம் செப். 20, 27, அக்டோபா் 4, 11, 18 ஆகிய ஐந்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் உண்டியல் திறக்கப்பட்டு பக்தா்கள் அளித்த காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உத்ஸவத்தில் பக்தா்கள் அளித்த காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டது. செயல் அலுவலா் சா்க்கரை அம்மாள், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் முத்து மணிகண்டன், கண்காணிப்பாளா் அா்ஜுன் முன்னிலையில் கோயிலிலிருந்த 8 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 12.8 லட்சம் வசூலானதாகத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com