சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

சிவகாசி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிவகாசி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா், அந்தப் பகுதிக்கு வந்த 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com