மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சத்யா நகா் பகுதியில், மதுப் புட்டிகளை சிலா் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் ராஜேந்திரன் (65) என்பவா் வீட்டில் 20 மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com