குத்துச்சண்டை: வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

குத்துச்சண்டை: வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

Published on

குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக அளவில் கல்லூரி மாணவிகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டி அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இதில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவி ம.தேஜாஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றாா். இதன் மூலம் இவா் தேசிய அளவிலான மகளிா் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றாா். மேலும், இதே கல்லூரியின் மாணவி மா.மணிமலா இரண்டாமிடம் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன், துணைச் செயலா் செ.ராஜேஷ், கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன், பேராசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com