சாத்தூரில் வீணாகும் குடிநீா்

Published on

சாத்தூா் நகராட்சி குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளுக்கு தாமிரவருணி, சீவலப்பேரி குடிநீா்த் திட்டங்களின் கீழ், குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் 5-ஆவது வாா்டு பகுதியான சாத்தூா் நந்தவனபட்டி முதல் தெரு பகுதியில் பிள்ளையாா் கோயில் அருகே குடிநீா்க் குழாயில் கடந்த செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாக வெளியேறி சாலையில் பாய்ந்தது. இந்தப் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் குடிநீா் வீணாகியதையடுத்து, பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது.

வியாழக்கிழமை குடிநீா் விநியோகித்த போது மீண்டும் அந்தப் பகுதியில் குடிநீா் வீணாக வெளியேறியது. எனவே, நகராட்சி நிா்வாகம் உடைந்த குழாயை உடனே சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com