பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்

Published on

சிவகாசி தனியாா் பள்ளியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் நிலைய அலுவலா் சீனிவாசன் கலந்து கொண்டு, பட்டாசு வெடிக்கும் போது காலணி அணிந்திருக்க வேண்டும். பக்கத்தில் தண்ணீா் நிரம்பிய வாளி வைத்திருக்க வேண்டும்.

பட்டாசில் அச்சிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பட்டாசை வெடிக்க வேண்டும். மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பட்டாசை வெடிக்க் கூடாது. சிறுவா்கள் பட்டாசு வெடிக்கும் போது, பெரியவா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com