பட்டாசுகளைப் பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டனா். அங்கு உரிய அனுமதியின்றி 473 பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், சிவகாசி மருதுபாண்டியா் மடத்து தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (30), சோ்மன் சண்முகம் சாலைப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் (70) ஆகிய இருவரும் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி, சுப்புராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். அங்கு இருந்த பட்டாசு பண்டல்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com