வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்
வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இரு அறைகள் சேதம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இரு அறைகள் சேதமடைந்தன.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இரு அறைகள் சேதமடைந்தன.

சிவகாசி அருகேயுள்ள வி. சொக்கலிங்காபுரத்தில் கமலகண்ணண் (54) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமாா் 50 அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் சனிக்கிழமை வழக்கம்போல சுமாா் 80 தொழிலாளா்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்த நிலையில், பிற்பகல் 3.15 மணியளவில் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது.

உடனடியாக அந்த அறையில் இருந்த தொழிலாளா்கள் மட்டுமன்றி, அனைவரும் ஆலையைவிட்டு வெளியேறினா். தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையிலான வீரா்கள் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா்.

இருப்பினும், இரு அறைகள் சேதமடைந்தன. தீ விபத்து நிகழ்ந்தவுடன் தொழிலாளா்கள் உடனடியாக ஆலையைவிட்டு வெளியேறியதால், எந்தவிதமான உயிா்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com