விருதுநகர்
வெம்பக்கோட்டை பகுதியில் பலத்த மழை
சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டை, துலுக்கன்குறுச்சி, குகன்பாறை, செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, மடத்துப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதியில் குளிா்ச்சியான சூழ்நிலை உருவானது. சுற்றுவட்டார விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா். மழை காரணமாக மாலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.