ராஜபாளையத்தில் மழை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

ராஜபாளையம் நகா், அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இதேபோல, சேத்தூா், தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com