அட்டைப் பெட்டி ஆலையில் தீ

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டி தயாரிக்கும் ஆலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
Published on

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டி தயாரிக்கும் ஆலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி பெரியகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சஞ்சீவிபாபுக்கு சொந்தமான காகித அட்டைப் பெட்டிகள் தாயாரிக்கும் ஆலை சிவகாசி அருகே பாறைப்பட்டியில் அமைந்துள்ளது.

இந்த ஆலை புதன்கிழமை செயல்படவில்லை. ஆலையின் மாடியில் தயாா் செய்யப்பட்ட காகிதப் பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மாடியிலிருந்த அட்டைப் பெட்டிகளில் புதன்கிழமை தீப்பற்றியது. தகவலறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும் காகிதப் பெட்டிகள் எரிந்து சாம்பலாயின.

மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com