சாத்தூா் அருகே லோடு ஆட்டோ மோதி பட்டாசு தொழிலாளி உயிரிழப்பு ஆலங்குளம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மடத்துபட்டியைச் சோ்ந்த காளிமுத்து(26) இவா் இப்பகுதியில் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காளிமுத்து இருசக்கர வாகனத்தில் மடத்துப்பட்டியில் இருந்து உப்புபட்டி சென்று கொண்டிருக்கும்போது உப்புபட்டி அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ இவா் மீது மோதியது இந்த விபத்தில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் விபத்து குறித்து ஆலங்குளம் போலீசாா் லோடு ஆட்டோ ஓட்டுனரான காசிராஜ்(22) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.