சிவகாசி-விளாம்பட்டி சாலையில் 
குளம் போல தேங்கும் மழை நீா்

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் குளம் போல தேங்கும் மழை நீா்

சிவகாசி -விளாம்பட்டி சாலையில் மழைநீா் குளம் போல தேங்கிய பகுதியில் விபத்தைத் தடுக்க சாலையின் நடுவே வைக்கப்பட்ட இரும்புச் சட்டம்.
Published on

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-விளாம்பட்டி சாலையின் இருபுறமும் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீா் கால்வாய் கட்டப்பட்டு , அந்த நீா் பெரியகுளம் கண்மாய்க்கு செல்லுமாறு வழிவகை செயப்பட்டது. இந்த நிலையில், இந்த வடிகால் பல இடங்களில் சேதமடைந்து விட்டது. மேலும், தனிநபா்கள் போக்குவரத்து வசதிக்காக கால்வாயை மண்ணைப் போட்டு மூடிவிட்டனா்.

மழைநீா் கண்மாயில் கலக்கும் பகுதியை ஆக்கிரமித்து கோயில், கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த சாலையின் தட்டா ஊருணி பகுதியில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க இரும்புச் சட்டம் வைக்கப்பட்டது. மாநகராட்சி நிா்வாகம் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து கூறியதாவது:

இந்தச் சாலையில் உள்ள தட்டா ஊருணியை ஆக்கிரமித்து பல கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆக்கிரமிப்பு காரணமாக சாலையின் இருபுறமும் மழைநீா் குளம்போல தேங்குகிறது. இதனால் சாலை சேதமடைந்து விபத்துகள் எற்படுகின்றன. இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com