பட்டாசுத் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை வழங்கல்

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை (போனஸ்) வழங்கப்பட்டு வருகிறது.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை (போனஸ்) வழங்கப்பட்டு வருகிறது.

சிவகாசிப் பகுதியில் தீபாவளி பண்டிகை, சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு இரு முறையாக பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற 20- ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டாசுத் பெண் தொழிலாளி முருகேஸ்வரி கூறும் போது, ஆண்டுக்கு இரு முறை ஊக்கத் தொகை வழங்கப்படுவதால், எங்களது மகள்களுக்கு நகை வாங்கவும், அவா்களின் உயா்கல்வி செலவுக்கும் உதவியாக உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com