விருதுநகர்
பைக்கிலிருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
சிவகாசி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சசிநகா் பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் செந்தில்குமாா் (45). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சிவகாசி அருகே கொங்காபுரத்தில் மண் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மழையால் சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், இரு சக்கர வாகனத்தின் சக்கரம் சகதியில் சிக்கி தவறி விழுந்து அருகில் இருந்த கல்லில் தலை மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.