ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் வீணாகும் குடிநீா் : பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் வீணாகும் குடிநீா் : பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் சந்தையகிணறுத்தெரு பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் மேற்குத் தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகும் செண்பகத்தோப்பு பேயனாற்றில் ஆழ்துளை, திறந்தவெளி கிணறுகள் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் 22 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

தாமிரபரணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் நீா்வரத்து குறையும்போது, பேயனாற்றிலிருந்து கிடைக்கும் குடிநீா் நகராட்சி முழுவதற்கும் விநியோகம் செய்யப்படுகிறது. வாரம் இருமுறை வந்த குடிநீா், தற்போது 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டும் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே, கைகாட்டி கோவில் பஜாா், சந்தையகிணற்றுத் தெரு, கூட்டுறவு பால் டிப்போ, கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட குடிநீா்க் குழாய்களை சரிசெய்து குடிநீா் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com