விருதுநகர்
லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 17 போ் காயம்
சாத்தூா் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னா் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 17 போ் காயமைடந்தனா்.
கோயும்புத்தூரிலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட அரசுப் பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை அதிகாலை சாத்தூா்-விருதுநகா் நான்கு வழிச் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னா் லாரி மீது அரசுப் பேருந்து பலமாக மோதியது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஒட்டுநா் சுதா்சிங் (53), நடத்துநா் பவுன்ராஜ் (54) உள்பட பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமைடந்தனா். இதையடுத்து, காயமடைந்தவா்களை மீட்ட போலீஸாா், அவா்களை சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா்.
மேலும், விபத்து குறித்து வச்சகாரபட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.