இளம்பெண் தற்கொலை
சிவகாசியில் குடும்பத் தகராறில் விஷம் குடித்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள குப்பண்ணாபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மனைவி பொன்பிரியா (25). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா்கள் தற்போது, குழந்தைகளுடன் நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பொன்பிரியா தனது குழந்தைகளுடன் சிவகாமிபுரத்தில் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதையடுத்து, மாமனாருக்கு வீட்டுக்கு சென்று மனைவியை குடும்ப நடத்த வருமாறு லட்சுமணன் அழைத்தாா். ஆனால், கணவனுடன் சோ்ந்து வாழ மறுத்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா்.
சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்பிரியா, வியாழக்கிழமை அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].