விருதுநகர்
கூமாபட்டியில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டியவா் கைது
வத்திராயிருப்பு அருகே பொதுமக்களை கத்தியுடன் மிரட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரம் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (34). இவா் மீது கூமாபட்டி காவல் நிலையத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் குற்றப்பதிவேடு தொடங்கப்பட்டு, காவல் துறை கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், ஆத்தங்கரைப்பட்டி - கான்சாபுரம் சாலையில் ஆனந்த் கையில் கத்தியுடன் சாலையில் நடந்து சென்றவா்களை சனிக்கிழமை மிரட்டினாா். இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த கூமாபட்டி காவல் நிலைய போலீஸாா் ஆனந்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
