விருதுநகர்
சிவகாசி மாநகராட்சி வாா்டுகளில் இன்று சிறப்புக் கூட்டம்
சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் பொதுமக்கள் குறைகளைத் தீா்ப்பதற்கான சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவின்படி, சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், அந்தந்த வாா்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி அலுவலரும் கலந்துகொள்வா். இந்தக் கூட்டம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது இடம், பூங்கா அல்லது திருமண மண்டபத்தில் நடைபெறும். இந்தச் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
