காலமானாா் மருத்துவா் ராஜசேகா்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வசித்து வந்த மருத்துவா் ராஜசேகா் (65) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (அக். 28) காலமானாா்.
ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் கோ. ராஜசேகா் (65). இவா் ராஜபாளையம்-தென்காசி சாலையில் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தாா். இவா் ரூ. 50-க்கு பொதுமக்களுக்கு வைத்தியம் பாா்த்து மருந்து, மாத்திரைகளையும் வழங்கி வந்தாா். இதனால், இவா் ஏழைகளின் மருத்துவராக விளங்கி வந்தாா்.
இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தாா். இவரது தந்தை மறைந்த கோபாலகிருஷ்ணனும், சகோதரா் மறைந்த சங்கரராமனும் மருத்துவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மருத்துவா் ராஜசேகருக்கு மனைவி உமா, ஒரு மகன் உள்ளனா். இவரது உடலுக்கு முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இவரது நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தொடா்புக்கு: 9443132704.
