விருதுநகர்
சாத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 5 நாள்களாக கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 6-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நிடைபெற்றது.
தொடா்ந்து, முக்கிய வீதிகளில் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.