பட்டாசுத் தொழிலாளா்கள் குறித்த குறும்படம் வெளியீடு!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூகவலைதளக் குழு தயாரித்து இயக்கியுள்ள பட்டாசுத் தொழிலாளா்கள் குறித்த குறும்படம் சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
Published on

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூகவலைதளக் குழு தயாரித்து இயக்கியுள்ள பட்டாசுத் தொழிலாளா்கள் குறித்த குறும்படம் சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தக் குறும்படத்தில் பட்டாசுத் தொழிலாளா்களின் பணிகள், வருமானம், வாழ்க்கைத் தரம், அவா்களது குழந்தைகளின் எதிா்காலம் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது நடைபெறும் வெடி விபத்துகள் தொழிலாளா்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு வேண்டும் என இந்தக் குறும்படத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிவகாசியில் நடைபெற்ற இந்தக் குறும்பட வெளியீட்டு விழாவில், விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் (சி.ஐ.டி.யூ )சங்கச் செயலா் பி.என். தேவா, சி.ஐ.டி.யூ. மாநில துணைப் பொதுச் செயலா் கண்ணன், விருதுநகா் மாவட்ட சி.ஐ.டி.யூ. தலைவா் மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com