வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம்.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம்.

வத்திராயிருப்பு காசி விஸ்வநாதா் கோயிலில் சூரசம்ஹாரம்

வத்திராயிருப்பு காசி விஸ்வநாதா் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் திங்கள்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
Published on

வத்திராயிருப்பு காசி விஸ்வநாதா் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் திங்கள்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு காசி விஸ்வநாதா் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில் நாள்தோறும் காலை கந்த சஷ்டி பாராயணமும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை வெள்ளை விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். பின்னா், வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் திடலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

தொடா்ந்து, சூரபத்மனுக்கு சாப விமோசனம் வழங்கிய முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (அக். 28) காலை 8.30 மணிக்கு மேல் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com