காங்கிரஸ் கட்சியினா் நலத்திட்ட உதவி

தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு, சாத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

சாத்தூா் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள தேவா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தூா் மறவா் மஹாஜன சங்கத்தினா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக நகரச் செயலா், நகா்மன்றத் தலைவா் குருசாமி ஆகியோா் தலைமையில் திமுகவினா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் கிருஷ்ணன் கோவில், அண்ணாநகா் பகுதிகளில் தேவா் சிலைக்கு சாத்தூா் நகரச் செயலா் டி.எஸ்.அய்யப்பன், ஜோதி நிவாஸ் ஆகியோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.பின்னா், தேவா் சிலை அருகே ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை அவா்கள் வழங்கினா்.

தேமுதிகவினா் நகரச் செயலா் அந்தோணி தலைமையிலும், அமமுகவினா் நகரச் செயலா் ஜி.ஆா்.முருகன் தலைமையிலும் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேட்டமலை கிராமத்தில் கிராம மக்கள் விரதமிருந்து முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக தேவா் சிலைக்கு பாலபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனா்.

நாம் தமிழா் கட்சி, பாா்வா்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் தேவா் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com