வேளாண் பல்கலை. -மருந்தியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

வேளாண் பல்கலை. -மருந்தியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் மருந்தியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
Published on

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம்

மருந்தியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

கலசலிங்கம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளா் தமிழ்வேந்தன், கலசலிங்கம் மருந்தியல் கல்லூரி முதல்வா் என்.வெங்கடேஷன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

நிகழ்ச்சியில் மருந்தியல் கல்லூரித் தலைவா் கே. ஸ்ரீதரன் வாழ்த்திப் பேசுகையில், முன் மருத்துவ மதிப்பீடு, மருந்தியல் ஆய்வுகளில் கூட்டுப் பணிகளுக்கு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றாா்.

வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், முதன்மையா் ஏ. ரவிராஜ், உணவுத் தர சோதனை ஆய்வக மேலாளா் காா்த்திகேயன் சுப்புராமு, துணைத் தர மேலாளா், வீரணன் அருண் கிரிதாரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com