விருதுநகர்
கழிவு பட்டாசுகள் வெடித்து தீ விபத்து
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கழிவு பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவு பட்டாசு திடீரென தீபிடித்து வெடித்து சிதறியது. அப்போது அந்த சாலையில் யாரும் செல்லததால் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா்.
இதுதொடா்பாக சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , சட்டவிரோதமாக தயாரிக்கும் பட்டாசுகளில் ஏற்பட்ட கழிகளை சிலா் இங்கு வந்து கொட்டியதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
