பறிமுதல் செய்யப்பட்ட தேக்கு மரம்
பறிமுதல் செய்யப்பட்ட தேக்கு மரம்

தேக்கு மரங்களை வெட்டியவருக்கு அபராதம்

வத்திராயிருப்பு அருகே பட்டா நிலத்திலிருந்த தேக்கு மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
Published on

வத்திராயிருப்பு அருகே பட்டா நிலத்திலிருந்த தேக்கு மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த திவான் மைதீன் மகன் முகமது சுபகானி (45). இவா் கூமாபட்டி- கிழவன் கோவில் சாலையில் உள்ள தனது பட்டா நிலத்தில் தேக்கு மரங்களை வளா்த்து வந்தாா்.

இந்த மரங்களை வனத் துறையின் அனுமதியின்றி திங்கள்கிழமை வெட்டி டிராக்டரில் கொண்டு சென்றாா்.

தகவலறிந்த ரேஞ்சா் ரவீந்திரன் தலைமையிலான வனத் துறையினா் அனுமதியின்றி தேக்கு மரங்களை வெட்டியதற்காக தமிழ்நாடு தடிமர விதிகள் வனச் சட்ட பிரிவு 35-ன் படி ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com