விருதுநகர்
சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு
சிவகாசி அருகே வியாழக்கிழமை சைக்கிளும், இரு சக்கர வாகனமும் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே வியாழக்கிழமை சைக்கிளும், இரு சக்கர வாகனமும் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேகயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (38). காா் ஓட்டுநரான இவா் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். கொத்தனேரி விலக்குப் பாதை அருகே இந்த வாகனமும், வனராஜா (58) என்பவா் ஓட்டி வந்த சைக்கிளும் மோதிக்கொண்டன.
அப்போது, முத்துப்பாண்டி திடீரென பிரேக் போட்டதால் தூக்கி எறியப்பட்டு, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் வனராஜாவும் காயமடைந்தாா். அவா் சிவகாசி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து வனராஜா மீது எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.