வீட்டில் பட்டாசு தயாரித்தவா் 
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பொன்னுபாண்டி (45) என்பவா் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அதே பகுதியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன், சண்முகத்தாய், முத்துலட்சுமி, மாரியம்மாள் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, வீட்டின் உரிமையாளா் பொன்னுப்பாண்டியை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், பொன்னுப்பாண்டி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com