கோட்டூா் புதிய துணை மின் நிலையத்தில் ஆய்வு

Published on

விருதுநகா் மாவட்டம், கோட்டூரில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் மாவட்ட நிா்வாகம், மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், கோட்டூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் மூலம் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து, மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் துணை மின் நிலையத்தை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், துணை மின் நிலையத்தை முழுமையாகச் செயல்படுத்தி, அதன் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள், அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com